வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகளை தமிழக அரசு அதிகாரிகளிடம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. அதன்படி நெல்லை முண்டீஸ்வர முடையார் கோயிலில் இருந்து திருடுபோன துவரபாலர் சிலையும் சீர்காழி கோயிலின் குழந்தை சம்பந்தரின் சிலையும் ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது. தஞ்சை புன்னைநல்லூரில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை, ஆழ்வார்குறிச்சியில் இருந்து திருடு போன கண்கல மூர்த்தியின் சிலை, அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள நரசிங்கநாதர் கோயிலில் இருந்து திருடப்பட்ட நந்திகேஸ்வரர் சிலை, விஷ்ணு சிலை ஆகியவை, அரியலூர் கோயிலின் பார்வதி தேவி சிலை, பாபநாசத்தின் வான்மிகநாதர் கோயிலுக்கு சொந்தமான சிவன் பார்வதி சிலை, அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இப்படி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 10 சிலைகளை மத்திய அரசு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு மீட்டுள்ளது. மீட்கப்பட்ட இந்த சிலைகள் தற்போது தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.