அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனம், விரைவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ள அதி உயர டிரோன் போர் விமானங்களை (HAPS ) உருவாக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற உள்ளது. இவற்றை உருவாக்க ரூ. 700 கோடி நிதியுதவியும் வழங்கப்படும். எச்.ஏ.எல் இந்த திட்டத்தை தேசிய விண்வெளி ஆய்வகத்துடன் (என்.ஏ.எல்) இணைந்து செயல்படுத்த உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இது பயன்பாட்டுக்கு வரும். இந்த டிரோன்கள் 500 கிலோ எடை, 70 அடி நீள இறக்கைகளுடன் இருக்கும். இவைகளால் சுமார் 70,000 அடி உயரத்தில் பறக்க முடியும். சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பல மாதங்கள் அங்கேயே இருந்து பணிபுரியும். பாதுகாப்புப் பணிகளுக்கு மட்டும் இல்லாமல், தொலைத்தொடர்பு, தொலைதூர உணர்திறன், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பணிகளுக்கும் இதனை பயன்படுத்த முடியும். HAPS வழக்கமான செயற்கைக்கோள்களுக்கும் டிரோனுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட உள்ளது.