அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட சில துறைகளில் வல்லுனர்கள், வேலையாட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தள்ளுபடி செய்யப்பட்ட எச் – 1பி விசா விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்ய அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை முடிவு செய்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு விண்ணப்பித்து, எச் 1பி விசா நிராகரிக்கப்பட்டோர், மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.