சிங்கம்புணரியில் பேசிய பா.ஜ.க தலைவர் ஹெச். ராஜா, ‘பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வர மத்திய அரசாங்கம் ரெடி. ஆனால் மாநில அரசு ரெடியா என்பதை தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவிக்க வேண்டும் என பேசினார். மேலும், திரையுலகில் தேசத்திற்கு எதிராகவும், தேச விரோதமாகவும் பேசுவதை கருத்துரிமையாக நினைப்பவர்கள் மட்டும்தான், இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இல்லை என்றால், பாரதத்தில் கொரோனாவால் ஒரு கோடி பேருக்கு மேல் இறந்திருப்பார்கள். மத்திய அரசு தடுப்பூசி விஷயத்தில் எந்த மாநிலத்துக்கும் எவ்வகையிலும் பாரபட்சம் காட்டுவதில்லை. தமிழக நிதியமைச்சருக்கு பொருளாதாரம் தெரியவில்லை. திராவிட இயக்கங்கள், மக்களை சுரண்டி தமிழகத்தை கடன் வலையில் சிக்க வைத்துள்ளன. தமிழகம் மாற்றத்தை நோக்கி திரும்ப வேண்டிய அவசியம் உள்ளது’ என தெரிவித்தார்.