கர்னி சேனா புகார்

உத்தரப் பிரதேசம் கைரானாவிலிருந்து 2016ல் ஹிந்துக்கள் வெளியேறியதற்கு காரணமான கேங்ஸ்டர் நஹித் ஹசன் உட்பட, உ.பி., சட்டமன்றத் தேர்தலின் 2ம் கட்ட பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சமாஜ்வாதி கட்சி 10 இடங்களை ஒதுக்கியது. அது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி முகமது முஸ்தபா, கைரானா வேட்பாளர் எஸ்பி நஹித் ஹுசைன், பா.ஜ.க முன்னாள் தலைவர் சுவாமி பிரசாத் மௌரியா, ஆசாத் சமாஜ் கட்சித் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் மீது கர்னி சேனா என்ற அமைப்பு புகார் அளித்துள்ளது. அதில், அவர்களின் ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு, வன்முறைகளை தூண்டும் பேச்சு, இனப் படுகொலை கருத்துகளை கூறியது, ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியது, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை கர்னி சேனா சுட்டிக்காட்டியுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரப்பட்டுள்ளது. மேலும் உ.பியில் இவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.