டில்லியில் 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா சூழல் காரணமாக இக்கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறும். தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டியில் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது, கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரி ரத்து, கொரோனாவுக்கான மருந்துகள், ஆக்சிஜனனுக்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் விவாதிக்கப்படும் என தெரிகிறது.