கடந்த ஜூன் மாதம் ஜி.எஸ்.டி 1,44,616 கோடி ரூபாய் வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூலான தொகையைவிட 56 சதவீதம் அதிகம். மேலும், ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், வசூல் 1.40 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும். பொருளாதார வளர்ச்சி மற்றும் போலி பில் தயாரித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கை காரணமாக ஜி.எஸ்.டி வசூல் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.