பெருகும் ராணுவ பலம்

எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. சமீபத்தில் அது கண்டுபிடித்த, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஒடிசாவில் உள்ள பாலாசோர் ஒருங்கிணைந்த ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தி சோதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த ஏவுகணைகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. இதேபோல, நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் புதிய 3ம் தலைமுறை ஆகாஷ் என்.ஜி ரக ஏவுகணையும் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. ஒலியைவிட 2.5 மடங்கு வேகத்தில் பாய்ந்து சென்று சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. இந்த ஏவுகணையில் பல்வேறு மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள், அகச்சிவப்பு இமேஜிங் கருவிகள் உள்ளன என்பதுடன் இதனை கையில் எடுத்து சென்று பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு.