வளர்ச்சியடையும் மணிப்பூர்

மணிப்பூரில் 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அடிக்கல் நாட்டினார். அப்போது அவர், ‘ரூ. 4,148 கோடி முதலீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 298 கி.மீ தூர சாலைகள் அனைத்துத் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ற வகையில் போடப்படும். இதனால், மணிப்பூர் நாட்டின் பிற பகுதிகளுடனும் அண்டை நாடுகளுடனும் இணைக்கப்படும். இதனால் அப்பகுதி, விவசாயம், சுகாதாரம், தொழில்துறை, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையும். வேலைவாய்ப்புப் பெருகும். மேலும், ரூ. 5000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டு, ஒரு வருடத்தில் பணிகள் தொடங்கும்’ என அறிவித்தார்.