வளரும் ஹிமாச்சல பிரதேசம்

பயங்கரவாத நடவடிக்கைகள், 370 சட்டப்பிரிவு போன்ற காரணங்களால் பல ஆண்டுகளாக வளர்ச்சி பெறமல் இருந்த ஜம்மு காஷ்மீர் பிரதேசம் தற்போது வேகமாக வளரும் மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன் பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் ரூ. 3,307 கோடி மதிப்புள்ள 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதலீட்டாளர்களுக்கு மலிவான நிலச் செலவு, நம்பகமான மின்சாரம், அனைவரும் அணுகக்கூடிய வகையிலான எளிய நிர்வாகம் போன்ற வசதிகளை அம்மாநில அரசு வழங்கி வருகிறது. இதில், 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 1,000 கோடி ரூபாய் மாநிலத்தில் எத்தனால் ஆலைகளை அமைப்பதற்காக மட்டுமே கையெழுத்திடப்பட்டு உள்ளது. இதைத்தவிர, மருத்துவ சாதனங்கள், கல்வி, மருந்துகள், காகித உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், சுகாதாரம், ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், தொழில்துறை உட்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சில தொழில் முனைவோர் தீம் பூங்காக்களை நிறுவுவதிலும் விருப்பம் காட்டியுள்ளனர்.