பாரதத்தில் கொரோனா நெருக்கடி குறித்து எழும் விமர்சனங்கள் குறித்தும் அதன் அரசியல் பொருளாதார சூழல் குறித்தும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் டாக்டர் ஜான் சி ஹல்ஸ்மன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘பாரதத்தை கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக அதிகரித்து அச்சுறுத்தி வருகிறது. விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார சிக்கல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. எனினும், இத்தனை நெருக்கடிகளுக்கு இடையிலும் பாரத தேசத்தின் அடிப்படை அம்சங்கள் மிகவும் வலுவாக இருப்பதால், உலக நாடுகளுக்கு மத்தியில் முன்னணி சக்தியாக பாரதம் உருவெடுக்கும். இத்தனை சவால்களுக்கு இடையிலும் பிரதமர் மோடி, பா.ஜ.கவின் அரசியல் அதிகார கட்டமைப்பு நிலைத்தன்மையுடன் உள்ளது. வரும் 2024ம் ஆண்டில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகவும் பிரபலமான நாடாக இந்தியா உருவெடுக்கும். பாரதத்தில் இளைஞர்கள் சக்தி அதிகமாக உள்ளது. அங்கு, 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 50 சதவீதத்துக்கு அதிகமாகவும், 35 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 65 சதவீதத்துக்கு அதிகமாகவும் உள்ளனர். மனிதவளம் சார்ந்த இந்த அம்சம் பாரதத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் உதவியாக இருக்கும்’ என கூறியுள்ளார்.