தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 3.07 மீட்டர் உயர்ந்துள்ளது, மிகக்குறைவாக ஈரோடு மாவட்டத்தில் 0.09 மீட்டர் மட்டுமே நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும், திருவள்ளூர், தர்மபுரி, கடலூர்,விழுப்புரம், கரூர், நாமக்கல், தேனி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் 1 மீட்டருக்கும் அதிகமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் 2 மீட்டருக்கு மேல் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ஈரோடு, கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் 0.09 முதல் 0.73 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.