சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ‘2014ல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பாரத தொழில்துறையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் கரோனாவுக்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு விரைவாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பசுமை எரிசக்திக்கு மாறுவதில் மற்ற நாடுகளைவிட பாரதம் அதிக முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, உயிரி எரிபொருள் கலப்பு, மாற்று வழிகளில் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அவ்வகையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் பாரதம்முன்னோடியாக உருவெடுக்கும் என நம்புகிறேன். வரும் 2030ம் ஆண்டுக்குள் எரிபொருளில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த இலக்கை முன்கூட்டியே 2025க்குள் எட்ட முடியும் என நம்புகிறோம்’ என தெரிவித்தார்.