பசுமை பேருந்து சேவை

கர்நாடகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தால் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டனர். அதே சமயம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகமும் நஷ்டத்தை சந்தித்தது. இதனை ஈடுசெய்ய அம்மாநில போக்குவரத்துக் கழகம் சில புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. அதில் ஒன்றாக, விவசாயிகளும் போக்குவரத்துக்கு கழகமும் பயனடையும் வகையில் ‘பசுமை பேருந்து’ சேவை துவக்கப்பட உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் விளைபொருட்களை சந்தைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். முதற்கட்டமாக இதற்காக 565 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு இந்த சேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளன. விவசாயிகளின் விளை பொருட்களை கொண்டு செல்ல ரெயில்வே துறை ஏற்கனவே’ கிசான் ரெயில்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.