சுபாஷ் சந்திரபோஸ் கொள்ளுப்பேத்தி கைது

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி வழியாக சிங்காரக்கவுரி அம்மனை தரிசிக்கும் நிகழ்ச்சிக்கு விஷ்வ ஹிந்து சேனா எனும் அமைப்பு கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு விடுதலைபோராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேத்தி ராஜ்ஸ்ரீ மற்றும் திருநங்கைகள் மடத்தின் தலைமை துறவியான ஹேமாங்கி சகி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காக ராஜ்ஸ்ரீ சவுத்ரி ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியிலிருந்து வாரணாசிக்கு ரயிலில் புறப்பட்டார். ஞானவாபி மசூதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், தடையை மீறி ஹிந்து அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வினை முன்கூட்டியே தடுக்கும் வகையில், உத்தரப் பிரதேச காவல்துறை நடவடிக்கை எடுத்தது. அந்நிகழ்ச்சிக்கு ராஜ்ஸ்ரீ வரும் ரயிலை அலகாபாத் அருகில் நிறுத்தி,வரை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து அலகாபாத்தின் அரசு விடுதியில் தங்க வைத்தனர். மேலும், வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான அஸ்ஸி காட்டிலிருந்து ஞானவாபிக்கு கிளம்பிய விஷ்வ ஹிந்து சேனாவின் தலைவர் தலைவர் அருண் பாதக் உள்ளிட்ட நால்வரை தடுத்து கைது செய்தனர்.