விருதை திரும்பப்பெற்ற அரசு

மாவோயிஸ்ட் சித்தாந்தவாதி கோபட் காண்டியின் ‘பிராக்ச்சர்டு ஃப்ரீடம்’ (உடைந்த சுதந்திரம்) என்ற புத்தகத்தை மராத்தி மொழிபெயர்த்ததற்காக அனகா லெலேவுக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய விருதை திரும்பப் பெற்றுள்ளது. கோபட் காண்டியின் ‘பிராக்ச்சர்டு ஃப்ரீடம்: எ ப்ரிஸன் மெமயர்’ மொழிபெயர்ப்பிற்காக 2021ம் ஆண்டிற்கான யஷ்வந்த்ராவ் சவான் இலக்கிய விருதை 2021ம் ஆண்டிற்கான மாநில அரசின் மராத்தி மொழித் துறை டிசம்பர் 6ம் தேதி அறிவித்திருந்தது. பிறகு இது இதுகுறித்து கடும் சர்ச்சை எழுந்தது.இதையடுத்து அந்தத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தீபக் கேசர்கர், விருது எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை ஆராய்வதாக அறிவித்தார்.டிசம்பர் 12 அன்று, அந்த விருது திரும்பப் பெறப்படும் என்று அரசு அறிவித்தது.

இதுகுறித்து பேசிய அமைச்சர் தீபக் கேசர்கர், “அனைவருக்கும் சிந்தனை சுதந்திரம் உண்டு.இருந்தாலும், நக்சல் சிந்தனைகளை உயர்த்துவது நமது அரசால் ஏற்கப்படாது.எங்களைப் பொறுத்தவரை தேசம் முதன்மையானது.இலக்கியத்திற்கு எழுதும் சுதந்திரம் உள்ளது.ஆனால் தடை செய்யப்பட்டதை எழுத முடியாது.’பிரிந்த சுதந்திரம்’ புத்தகத்திற்கு தடை இல்லை என்றாலும், மாநிலத்தில் நக்சலிசத்தை ஊக்கப்படுத்த முடியாது.நக்சலிசத்தை முறியடித்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா.நக்சலைட்டுகளுக்கு 100 சதவீத ஆள்சேர்ப்பு நமது பழங்குடியின சகோதரர்களிடம் இருந்து வந்தது, அது இப்போது முழுவதுமாக தடுக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட இலக்கியங்களை சமூகம் மன்னிக்காது.நாங்கள் உலகத்திலிருந்து வித்தியாசமாக ஏதாவது செய்கிறோம் என்ற நகர்ப்புற நக்சலிசத்தால் உருவாக்கப்பட்ட இத்தகைய சூழ்நிலையை ஏற்க முடியாது.எந்த சூழ்நிலையிலும் நக்சலிசத்தை மாநில அரசால் ஏற்க முடியாது” என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்போக்கு மராத்தி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்படும் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். எழுத்தாளரும், மாநில அரசின் மொழி ஆலோசனைக் குழுவின் தலைவருமான லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். விருது தேர்வுக் குழுவை சேர்ந்த டாக்டர் பிரத்யா தயா பவார், நீரஜா மற்றும் ஹேரம்ப் குல்கர்னி ஆகிய மூன்று உறுப்பினர்களும், “ஜனநாயக நடைமுறைகளை அவமதிப்பதாக” கூறி மாநில இலக்கியம் மற்றும் கலாச்சார வாரியத்திலிருந்து ராஜினாமா செய்தனர். சரத் பவிஸ்கரும் தனது விருதை மாநில அரசிடம் திருப்பி அளித்துள்ளார். ஷரத் பாவிஸ்கர் மற்றும் அருண் ஷேவதே போன்ற மராத்தி எழுத்தாளர்கள் கோபட் காண்டியின் புத்தகத்தின் மொழிபெயர்ப்பிற்கு வழங்கப்பட்ட விருதை திரும்பப் பெறுவதற்கான அரசின் முடிவை எதிர்த்துள்ளனர். இவர்களின் இந்த செயல்பாடு, இவர்கள் யார், யாருக்கு இவர்களது ஆதரவு, இவர்களின் பின்னணி என்ன என்ற உண்மைகளை விளகுவதாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோபட் காண்டி டெல்லியில் கடந்த செப்டம்பர் 2009ல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவோயிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினரான இவர், 2008ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் உள்ள குனூர்காய் கிராமத்தில் உயரடுக்கு மாவோயிஸ்ட் எதிர்ப்பு கமாண்டோ பிரிவு கிரேஹவுண்ட்ஸ் குழு மீது தாக்குதல் உட்பட பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. சிறையில் இருந்தபோது, அவர் தனது நினைவுக் குறிப்புகளை ‘உடைந்த சுதந்திரம்’ என்ற தலைப்பில் எழுதினார்.புத்தகம் 2021ல் வெளியிடப்பட்டது.இந்த புத்தகம் வெளியான பிறகு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சி.பி.ஐ மாவோயிஸ்ட் அவரை துரோகி என்று அழைத்தது.