விசாரணையை தடுக்கும் அரசு

ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் லவ் ஜிஹாத் காரணமாக அடுத்தடுத்து இரண்டு மைனர் சிறுமிகள் கொல்லப்பட்டனர். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த ஜார்க்கண்ட் சென்றுள்ள என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ, மாநில அரசு விசாரணையைத் தடுக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். “நாங்கள் வருவது குறித்து மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. ஆனால் விசாரணைக்கு உதவ தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. என்.சி.பி.ஆர்.சியின் ஒரு குழு கற்பழிப்புக்குப் பிறகு தூக்கிலிடப்பட்ட சிறுமியின் குடும்பத்தைச் சந்திக்க விரும்பியது. கலெக்டர் ஒப்புதல் அளித்தார். ஆனால், கிராமத்திற்கு வந்த பிறகு, அவளுடைய பெற்றோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. யாரோ அவர்களை காரில் அழைத்து சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் எங்கள் குழுவிடம் தெரிவித்தனர். இதன் மூலம் மாநில அரசு விசாரணையைத் தடுக்கிறது”  என்று கூறினார். ஷாருக் என்ற முஸ்லிம் நபரால் தும்காவில் ஒரு மைனர் பெண் எரித்துக் கொள்ளப்பட்டார். 14 வயது பழங்குடியின சிறுமி அர்மான் அன்சாரி என்ற முஸ்லிம் நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.