எதிர்க்கட்சி இல்லா ஆட்சி

நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், நாகாலாந்து தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) 25 தொகுதிகளிலும் பா.ஜ.க 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதைத்தவிர, என்.சி.பி 7, என்பி.பி 5, எல்.ஜே.பி (ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி, ஆர்.பி.ஐ (அத்வாலே) கட்சிகள் தலா 2 இடங்களிலும்., ஜேடி (ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், என்.டி.பி.பி மற்றும் பா.ஜ.க கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை இக்கூட்டணி இன்னும் கோரவில்லை. இந்நிலையில், 2வது முறையாக பா.ஜ.க, என்.டி.பி.பி கூட்டணி ஆட்சி அமைக்க ஏதுவாக, வெற்றி பெற்ற பிற கட்சிகள் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன்வந்துள்ளன. இப்படி தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளும், பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், நாகாலாந்தில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமையவுள்ளது. இதில், இக்கூட்டணி கடந்த 2015 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஆட்சி அமைத்த பிறகு எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவானது. இந்தமுறை ஆட்சி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.