கோயில் நிதியில் கை வைக்கும் தமிழக அரசு

பல கோயில்களில் ஒரு கால பூஜை செய்வதற்குக்கூட நிதியில்லை என்று பராமரிப்பில்லாமல் வைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், கோயில் சொத்துக்களை வேறு பயன்பாட்டிற்கு உபயோகிக்க கூடாது, ஹிந்து மதம் சார்ந்த பணிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை அறிவித்துள்ளது. ஆனால், கோயில் நிதியை எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு தி.மு.க கட்சிக் கொடி மற்றும் சின்னங்களுடன் அன்னதானம் வழங்குகிறது தி.மி.க அரசு. இத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போது பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பெரிய கோயில்களின் நிதியிலிருந்து கொரோனா நிவாரண பணிகளுக்கு 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை அனுப்பியது நினைவிருக்கலாம். இதே போன்று மாற்றுமத வழிபாட்டு தலங்களில் தி.மு.க அரசு அறிவிக்கத் துணியுமா, ஹிந்து கோயில்கள் என்றால் இளக்காரமா என ஹிந்துக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.