அரசு தங்க பத்திரத் திட்டம் 4 வது வரிசை வெளியிடப்பட்டுள்ளது. பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ 4,807. என்றும் ஜூலை 20-ஐ செட்டில்மெண்ட் தேதியாக கொண்ட அந்த தங்க பத்திரங்கள் 2021 ஜூலை 12 முதல் 16 வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் தங்க கடன் பத்திரங்களை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.50 சிறப்பு தள்ளுபடியும் தரப்படுகிறது. எனவே, அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தங்கத்தின் வெளியீட்டு விலை, ஒரு கிராமுக்கு ரூ 4,757 ஆக மட்டுமே இருக்கும்.