தற்போது உலகம் முழுவதும், கரியமில வாயு அதிகரிப்பு, பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பருவநிலை மாற்றம் அதிகரித்து வருகின்றன. இதனைத் தவிர்க்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் பருவநிலையை பாதுகாக்க தனது கூகுள் மேப் செயலியில் ஒரு புதிய அம்சத்தைக் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வாகன ஓட்டிகளால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப் செயலியில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இரண்டு, மூன்று வழிகளை காண்பிக்கும். இவற்றுள் சிறந்த வழி எது என்று கூகுள் மேப் செயலி தேர்வு செய்து சிபாரிசு செய்யும். அதில், பருவநிலை மாற்றத்தை தவிர்க்க அதிக வாகன புகை, சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாத வழியை காண்பிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழியாக வாகனங்கள் பயணித்தால் அதிக புகை வெளியீட்டை தவிர்க்கலாம். இந்த முயற்சி பல தரப்பினரிடையே வரவேற்பையும் பெற்றுள்ளது.