டுவிட்டரைத் தொடர்ந்து கூகுள்

இந்தியாவின் வரைபடத்தை சிதைத்துக் காட்டிய டுவிட்டர் பின்னர் அதனை நீக்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று, தேடுபொறியான கூகுளும் இந்தியாவின் சிதைந்த வரைபடத்தை வெளியிட்டு மீண்டும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://trends.google.com/trends/explore?q=India&geo=IN என்ற கூகிள் ட்ரெண்ட்ஸ் இணையதளத்தில் ஒரு பிரிவில், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களின் யூனியன் பிரதேசங்களையும் கூகிள் சர்ச்சைக்குரிய பகுதிகளாக காண்பித்துள்ளது. இந்திய வரைபடத்தின் சிதைந்த பதிப்பை வெளியிடுவதற்காக கூகுள் விமர்சனத்திற்கு ஆளானது இது முதல் முறை அல்ல. பிப்ரவரி 2020ல், கூகுளின் வழிகாட்டும் வரைபடங்கள் காஷ்மீரின் எல்லைகளை புள்ளிகளுடன் சர்ச்சைக்குரிய பகுதிகளாக தெரியும் வண்ணம் வெளியிட்டது. 2013ம் ஆண்டிலும், கூகுள் வரைபடம், போக் மற்றும் அக்சாய் சின், அருணாசனல் பிரதேசத்தின் சில பகுதிகளை இந்திய எல்லைக்கு வெளியே இருப்பதாக காட்டியதற்காக விமர்சனத்திற்கு உள்ளானது.