கொரோனாவிற்கு எதிரான போரில் பாரதம் எந்த நாட்டின் உதவியும் இல்லாமலேயே தனியாகவே வெற்றி பெறும் திறனை பெற்றுள்ளது. எனினும், நமது பாரத பிரதமர் மோடியின் பல நாடுகளுடனான நெருங்கிய நட்பை முன்னிட்டு, நமது அரசு கேட்காமலேயே பல நாடுகளும், பல நாட்டை சேர்ந்த மக்களும் சில தனியார் நிறுவனங்களும் தன்னிச்சையாக இதில் உதவி வருகின்றனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ், 50,000 டாலர் நிதியுதவி அளித்துள்ளார். 40 அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் பாரதத்திற்கு உதவ முன்வந்துள்ளனர். அவர்கள் அடுத்த சில வாரங்களில் 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்ப உள்ளனர். பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் ஆக்சிஜன் செறியூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகின்றன. முன்னதாக கூகுள் நிறுவன தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயலதிகாரி சத்ய நாதெள்ளா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை முன்னரே அறிவித்துள்ளனர்.