மத்திய பிரதேச சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 9 முதல் நடைபெறவுள்ளது. பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து அங்கு நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இது. எனவே, இக்கூட்டத்தொடரில் காரசாரமான வாக்குவாதம் நடைபெறக்கூடும். இதுபோன்ற சமயங்களில், அநாகரிகமான வார்த்தை பிரயோகங்கள் நடைபெறுவதை தடுக்கவும், சட்டப்பேரவையின் மாண்பை பேணவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, சட்டப்பேரவையில் தவிர்க்க வேண்டிய 300 வார்த்தைகள் அடக்கிய ஒரு சிறிய புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இந்த புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.