தங்கமான எறும்புகள்

கோலார் தங்க வயலை விட மிகப் பெரிய தங்க சுரங்கம் பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுயி பகுதியில் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய புவியியல் துறை நடத்திய ஆராய்ச்சியில் அங்கு 222 மில்லியன் டன் தங்கம் இருப்பதும் இது பாரதத்தின் மொத்த தங்க மதிப்பில் 44 சதவீதம் என்பதும் தெரியவந்துள்ளது. சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அங்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி என்ற சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஜமுயி பகுதியின் செம்மண் நிலத்தில் எறும்பு கூட்டங்கள் புற்று அமைப்பதற்காக குழி தோண்டியுள்ளது. அப்போது அதிலிருந்த மண் தங்கம் போன்று மின்னியுள்ளது. இதைப் பார்த்த அந்த பகுதி பொது மக்கள் இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அரசு சார்பில் அந்த இடத்தில் ஆய்வு நடத்தியபோது அங்கு தங்கம் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.