தங்கப் பத்திரத் திட்டம்

மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து தங்கப் பத்திரங்களை வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபர் முதல் 2022 மார்ச் மாதம் வரை 4 பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன. 2021ம் ஆண்டில் நவம்பர் 2, டிசம்பர் 7 ஆகிய தேதிகளிலும், 2022ம் ஆண்டில் ஜனவரி 18, மார்ச் 8 ஆகிய தேதிகளிலும் வெளியிடப்படும். தங்கத்தில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இந்த தங்கப் பத்திரங்களை வங்கிகள், தபால் அலுவலகங்கள், பங்குச் சந்தை மூலம் வாங்கலாம். குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் 4 கிலோவரை இதில் தனி நபர்கள் முதலீடு செய்யலாம். ஆன்லைன், டிஜிட்டல் முறைகளில் தங்கம் வாங்குவோருக்கு நிர்ணயிக்கப்பட்ட தங்கத்தின் விலையில் இருந்து ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படும். முதலீட்டிற்கு 2.50 சதவீத வட்டியும் கிடைக்கும்.