வங்கி காசோலைகள் செல்லும்

கடந்த, 2020 ஏப்ரலில், யூனியன் வங்கியுடன், ஆந்திரா வங்கியும் கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்பட்டன. அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கு எண் மாற்றப்படவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளை வங்கியில் கொடுத்து, புதிய காசோலைகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பழைய வங்கி காசோலைகள், ஜூன் மாதத்திற்கு பின் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளின் பழைய காசோலைகளையும், ஐ.எப்.எஸ்.சி., கோடுகளையும், செப்டம்பர் வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதிய வங்கியின் காசோலைகளையும், ஐ.எப்.எஸ்.சி., கோடுகளையும் பெற்றுக்கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது யூனியன் வங்கி.