பாரதத்தின் எரிசக்தி பாதுகாப்பின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படும் மத்திய அரசு நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (சி.ஐ.எல்), அதன் சுய வளர்ச்சி இலக்குகளை நோக்கி முன்னேறுவது மட்டும் இல்லாமல், பாரதத்தின் பல பின்தங்கிய மற்றும் தொலைதூர குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றங்களைக் கொண்டு வருவதிலும் முனைப்புடன் செயல்படுகின்றன. அவ்வகையில், அதன் துணை நிறுவனங்களில் ஒன்றான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (ஈ.சி.எல்), மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில் சூரிய எரிசக்தி, பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் மற்றும் தரமான கல்வி வசதிகளை வழங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால், அங்கு தற்போது 24 மணி நேர மின் வசதி மக்களுக்கு கிடைத்துள்ளது. மாணவர்களின் படிப்பு, மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றம் அனைத்தும் இதனால் மேம்பட்டு வருகிறது.