ஞானவாபிவழக்கறிஞர் காலமானார்

சர்ச்சைக்குரிய ஞானவாபி அமைப்பு தொடர்பாக நடந்து வரும் வழக்கில், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் நிர்வாகக் குழுவான அஞ்சமுன் இன்டெஜாமியா மசூதிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும் பனாரஸ் பார் அசோசியேஷனின் மூத்த வழக்கறிஞர்அபய் நாத் யாதவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியளவில் பெரிய அளவில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வாரணாசியில் உள்ள திரிமூர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதன்பிறகு, யாதவின் குடும்பத்தினர் அவரை வாரணாசியில் உள்ள சுபம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்குள்ள மருத்துவர்களும் அவரது மரணத்தை உறுதிப்படுத்தினர்.ஆகஸ்ட் 4 அன்று, தற்போது நடந்துகொண்டிருக்கும் ஞானவாபி வழக்கில் முஸ்லீம் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட வேண்டியிருந்தது.அதில், அபய்நாத் யாதவின் பங்கு முக்கியமானது.என்பது குறிப்பிடத்தக்கது.