ஞானவாபி: விரைவான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் வழி வகுக்கும்

வாரணாசியில் உள்ள அஞ்சுமன் இஸ்லாமியா மஸ்ஜித் கமிட்டியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஞானவாபி வளாகத்திற்குள் காணக்கூடிய மற்றும் கண்ணுக்குத் தெரியாத ஹிந்து தெய்வங்களை வழிபடுவதற்குத் தொடுக்கப்பட்ட வழக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தால் தடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள விஎச்பியின் தேசிய செயல் தலைவர் ஸ்ரீ. அலோக் குமார், தொழில்நுட்ப ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ‘’வழக்கு இப்போது தகுதியின் அடிப்படையில் தொடரும் மற்றும் சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு வெற்றியைக் காண்கிறோம். இப்போது வழக்கு இறுதித் தீர்ப்பை நோக்கி விரைவாகத் நகரும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.