இந்தியாவுக்கு எதிராக ராகுவுலுடன் ஜார்ஜ் சோரஸ்

பாரத் ஜோடோ யாத்திரையில் தில்லி பகுதிகளில் ராகுலோடு நடந்த ஒரு பிரபலம் சலில் ஷெட்டி. இந்தியாவுக்கு எதிராக, தேசியத்துக்கு எதிராக தனது பண பலத்தின் மூலம் செயலாற்றி வரும் ஜார்ஜ் சோரசின் ஓபன் சொசைட்டி என்ற அறக்கட்டளையின் உலகளாவிய துணைத்தலைவர் இவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராகுலின் நிகழ்ச்சிகளை மேடையில் வழி நடத்தியவர், பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட பேராரியர் கமால் முனிர். 2010 இல் பாகிஸ்தானின் தொழில் கொள்கையை வடிவமைத்து கொடுத்த அவர், பாகிஸ்தான் நலனுக்காகவே வெளிநாடுகளில் வேலைசெய்து வருவதாக கூறப்படுபவர். தற்போது அமெரிக்காவில், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் ராகுல் பேசிய கூட்டத்தில் ராகுலோடு நெருக்கமாக காணப்பட்டவர் சுனிதா விஸ்வநாத் என்பவர். இந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பின் பெயரில் இஸ்லாமியர்களோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்து வருபவர் இவர். இவரும் ஜார்ஜ் சோரசுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

ஆட்சியில் இருக்கும் காங்கிரஸை விட, ஆட்சியில் இல்லாத காங்கிரஸ்தான் தேசத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று சில தேசபக்த அறிஞர்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் ராகுல் காந்தியின் நடத்தையும் பேச்சும் அதை உண்மையாக்குகிறது. இன்றைய நிலையில் எம்.பி. இல்லை என்றாலும், கேரளாவின் முஸ்லிம் பெரும்பான்மை வயநாடு தொகுதியை விட்டால் தனக்கு வேறு தொகுதி இல்லை என்ற நிலை ராகுலுக்கு. பிறகு வேறு எப்படிப் பேசுவார்? மொத்தத்தில் விசாரணை வளையத்திற்குள் ராகுலை கொண்டு வர வேண்டிய நேரம் இது. களத்தில் இறங்க வேண்டும் என்.ஐ.ஏ, அதாவது தேசிய புலனாய்வு முகமை.