ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கருத்துப்படி, ஜியோ, 79 லட்சம் வாடிக்கையாளர்களை கூடுதலாக பெற்றுள்ளது. போட்டி நிறுவனங்களான பாரதி ஏர்டெல் 40.5 லட்சம் வாடிக்கையாளர்களையும் வோடபோன் ஐடியா 10.8 லட்சம் வாடிக்கையாளர்களையும் கூடுதலாக பெற்றுள்ளன. டிராய் தரவுகளின் படி, மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 42.29 கோடியாகவும் ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 35.23 கோடியாகவும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர் எண்ணிக்கை 28.37 கோடியாகவும் அதிகரித்துள்ளன.