கேரள மாநிலம் கொல்லம் அருகே வனப்பகுதியில் 2 ஜெலட்டின் குச்சிகள், 6 டெட்டனேட்டர் பேட்டரிகள், ஒயர்கள் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதே போல, பத்தனம்திட்டா மாவட்டம் கோநி வனப்பகுதியிலும் 90 ஜெலட்டின் குச்சிகளை கண்டுபிடித்து உள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உளவு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெலட்டின் குச்சிகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், அவற்றில் பேட்ச் எண் இல்லாததால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்க இயலவில்லை. இவை, அதிக சக்தி வாய்ந்தவை அல்ல என்பதால் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சிக்கு இவற்றை பயன்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கும் கேரள பயங்கரவாதத் தடுப்பு படையினர் இச்சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் விசாரணை நடத்த உள்ளனர்,. இந்நிலையில், அங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்திருப்பது உறுதியாகி உள்ளதால் எல்லை பகுதிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.