உலகின் முக்கிய பொருளாதார நாடுகளை ஒன்றிணைக்கும் செல்வாக்குமிக்க குழுவான ‘ஜி 20’ அமைப்பின் 2023ம் வருட கூட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறவுள்ளது. ஜம்மு காஷ்மீரின் 370வது சட்டப்பிரிவின் நீக்கத்திற்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் முதல் சர்வதேச உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ஜம்மு காஷ்மீர் அரசு 5 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலை ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் இக்குழுக்களின் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.