இறுதிச் சடங்கு புறக்கணிப்பு

விவசாய போராட்டம் எனும் பெயரில் டெல்லி அருகே சிங்கு குண்டிலி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் சில நாட்களுக்கு முன், சீக்கிய மதநூலை அவமதித்ததாகக் கூறி லக்பீர் சிங் என்பவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது உடல் பஞ்சாபில் உள்ள அவரது சொந்த ஊரான சீமா பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு எவ்வித மத சடங்குகளையும் செய்யக் கூடாது என்று சீக்கிய அமைப்பு உத்தரவிட்டதால், கிராம மக்களும், எந்த சீக்கிய மதகுருவும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. ‘அர்தாஸ்’ எனப்படும் பிராத்தனையும் செய்யப்படவில்லை. அவரது குடும்பத்தினர், மட்டுமே பங்கேற்றனர். தேசிய பட்டியல் ஜாதியினருக்கான ஆணையம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், லக்பீர் சிங்கை கொன்றதாக இதுவரை நான்கு நிஹாங் சீக்கியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டாவதாக கைது செய்யப்பட்ட நரேன் சிங்கை, அவரது செயலுக்காக கிராமத்தினர் பண மாலைகளை போட்டு பாராட்டியுள்ளனர்.