கேட்காமலே தமிழகத்துக்கு நிதி

பருவநிலை மாற்றத்துக்கான தேசிய செயல்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 8 திட்டங்களில் ‘பசுமை இந்தியா’ தேசியத் திட்டமும் ஒன்று. நாட்டில் வனப்பகுதியை அதிகரிப்பது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதுவே இத்திட்டம் நோக்கம்.  ‘பசுமை இந்தியா’ திட்டத்தின் கீழ், தமிழக அரசிடமிருந்து எந்தத் திட்டத்தையும், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பெறவில்லை. ஆனாலும் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2001ம் ஆண்டிலிருந்து தமிழகத்துக்கு ரூ. 127.31 கோடி வாங்கப்பட்டுள்ளது.  காடு வளர்ப்பு, மேலாண்மை, இழப்பீடு திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பசுமையை அதிகரிக்க 2021 – 22ம் ஆண்டு வரை ரூ. 113.42 கோடி வழங்கப்பட்டுள்ளது.