சுதந்திர போராட்ட வீரரா ஈ.வே.ரா

தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்திய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், 150 ஆண்டுகளுக்கு முன்னே விடுதலைக்காக போராடியது தமிழ் மண். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, வேலுநாச்சியார், வ.உ.சி., திருவிக , பெரியார், பாரதிதாசன், பசும்பொன் முத்துராமலிங்கதேவர். ம.பொ.சி, உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இவர்களின் வீரமும், தியாகமும் என்றும் மறக்க முடியாதவை. வ.உ.சி., யின் 150வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார். பாரத விடுதலைக்கு ஈ.வெ.ரா போராடினாரா, தமிழக மக்களிடம் தவறானவரலாற்றுத் தகவலை ஸ்டாலின் திணிக்கிறாரா, முதல்வருக்கு தவறான தகவல் துண்டு சீட்டில் எழுதி கொடுக்கப்பட்டதா? ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டால் நம்மால் ஒரு குண்டூசிகூட தயாரிக்க முடியாது, தமிழ்நாட்டை மட்டுமாவது ஆங்கிலேயர்கள் ஆள வேண்டும், ஆகஸ்ட் 15 நமக்கு துக்க தினம் என கூறியவர்தானே ஈ.வே.ராமசாமி நாயக்கர் என இணையதளவாசிகளும் பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.