முன்கள பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்த பிரதமர் மோடி, ‘நாடு முழுவதும், ஒரு லட்சம் முன்களப் பணியாளர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பாட திட்டத்தை நிபுணர்கள் வடிவமைத்து உள்ளனர். இப்பணி 2 அல்லது 3 மாதங்களில் நிறைவு பெறும். அவர்களுக்கு கொரோனாவை எதிர்த்து போராட முறையான பயிற்சி அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் 1,500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை போர்க்கால அடிப்படையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது’ என தெரிவித்தார்.