பாதிரிகள் மீது மோசடி வழக்கு

மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஐந்து பாதிரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது நிதி மோசடி செய்ததாக மத்திய பிரதேச பொருளாதார குற்றப்பிரிவுத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நில பேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட இந்த பாதிரிகளால் அரசுக்கு ரூ. 7.62 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அரசாங்க நிலத்தின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்து சர்ச் கட்டிய மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஐந்து பாதிரிகள், குத்தகைத் தொகையை அரசுக்கு செலுத்தவில்லை. மேலும் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டியுள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு இன்றும் நன்றி செலுத்தும் வகையில் ஆங்கிலேயர் காட்சி காலத்தில் பெருமளவிலான நிலங்கள் சர்ச்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. எனினும், கிறிஸ்தவ சர்ச்சுகள் அதன் வெவ்வேறு பிரிவுகள் மற்றும் தனிநபர்கள் மூலம் அரசாங்கம், கோயில்கள் மற்றும் அப்பாவி தனிநபர்களிடமிருந்து நிலத்தை அபகரித்து சர்ச் கட்டுவது வாடிக்கையாகிவிட்டது.