வீடுகளுக்கு தீ வைத்த முன்னாள் எம்.எல்.ஏ கைது

மணிப்பூர் வன்முறையின்போது, வீடுகளுக்கு தீ வைத்த குற்றத்திற்காக குகி முன்னாள் எம்.எல்.ஏவான தங்கசலம் ஹக்கிப் கைது செய்யப்பட்டுள்ளார். மே 22 காலை தலைநகரில் வெடித்த புதிய வன்முறையில் ஈடுபட்டதற்காக டி.டி ஹக்கிப் என அழைக்கப்படும் தங்கசலம் ஹக்கிப் மற்றும் இருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் மாநில முதல்வர் என் பிரேன் சிங், இந்த சதியில் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். ஆனால் அவரது பெயரை வெளியிடவில்லை. மேலும், மாநில அரசு இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாநில அரசுடன் இணைந்து ஒத்துழைக்குமாறு மாநில மக்களையும் முதல்வர் வலியுறுத்தினார். மத்திய பாதுகாப்புப் படைகளின் கூடுதல் 20 கம்பெனிகளை வெவ்வேறு முக்கியமான இடங்களில் நிறுத்துமாறு மாநில அரசு கோரியுள்ளது என்று தெரிவித்தார். சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர எண்கள் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். டி.டி ஹக்கிப் மற்றும் அவரது கூட்டாளிகளின் கைது இதில் மறைந்துள்ள உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் குகி மாணவர் அமைப்பின் (KSO) டெல்லி பிரிவு, இம்பாலின் சாசாத் அவென்யூவில் உள்ள ஒரு ஐ,சி,ஐ சர்ச் மெய்தே கும்பல்களால் குறிவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது என்று பொய்யாகக் கூறியது,  வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டும் வகையில் டுவீட் செய்தது.