2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 26 சதவீதம் குறைந்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா மாநாட்டின் (UNCTAD) கருத்து தெரிவிக்கிறது. ஆனால், 2021 – 22 நிதியாண்டிற்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மார்ச் 2022க்குப் பிறகுதான் வெளிவரும் என்பதால் இதில் தெளிவில்லை. மத்திய அரசின் தரவுகளின்படி, 2021 – 22 நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இது 48.5 பில்லியன் டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டுக்கு சமமாகவே உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் சில பெரிய ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டால் இது மேலும் உயரக்கூடும். அந்நிய நேரடி முதலீடு குறையவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. 2014 முதல் பாரதத்தின் மொத்த அன்னிய நேரடி முதலீடு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது, 2014 முதல் 2021 வரை 128 சதவீதம் இது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.