வெளிநாடுகள் ஆர்வம் காட்டும் பாரதம்

டெல்லியில் நடைபெற்ற வியாபாரிகள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இன்று உலக நாடுகளின் நம்பிக்கையை பாரத பெற்றுள்ளது. நமது நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வளர்ந்த நாடுகள் மிகவும் ஆர்வமாக உள்ளன. ஆனால், 2014ம் ஆண்டுக்கு முன்னர், பாரதப் பொருளாதாரம் பலவீனமானதாகக் கருதப்பட்டது, நமது நாட்டுடன் வர்த்தகம் செய்வதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. இன்று, பாரதத்தை பொருளாதார வளர்ச்சியின் என்ஜினாக உலகம் காண்கிறது. வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வணிகம் செய்ய வேண்டியது அவசியம். எந்தவொரு அதிகாரியாலும் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பும் வர்த்தகர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என்று வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு உறுதியளிக்கிறேன். மக்கள் மற்றும் வணிகங்களின் இணக்கச் சுமையைக் குறைக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுமாறுஅழைப்பு விடுக்கிறேன். ஆனால், அதேசமயம் அவர்கள் அரசு மற்றும் வர்த்தக நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பாரதம் வழங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ என்ற தெளிவான அழைப்பை தேசத்தின் இளைஞர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகமான பெண்களை வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோர்களாக ஆக்குவதற்கு நாம் ஊக்குவிக்க வேண்டும். பாரதத்தின் மக்கள்தொகையே அதன் மிகப்பெரிய பலமாக மாற்றியமைத்தது. பிரதமரின் அயராத உழைப்பால், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சமையல் எரிவாயு, குடிநீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமமும் இணைய அணுகலைப் பெறுவதை உறுதி செய்துள்ளது பாரதத் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம்’ தன்னம்பிக்கை பாரதம்’ என்ற கனவை முன்னோக்கி கொண்டு செல்ல, பெரிய, சிறிய என அனைத்து வர்த்தகர்கள், தொழில்முனைவோர் ஒன்றிணைந்து செயல்பட ஒரு கூட்டு தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.