பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் தொடர் அட்டூழியங்களின் மற்றொரு நிகழ்வாக, சிந்து பகுதியில், வெறும் 9 வயதேயான ஹிந்து மைனர் சிறுமி வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, 45 வயது முஸ்லிம் கடத்தல்காரனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். ரேஷ்மா என்ற 9 வயது சிறுமி பயத்துடன் இந்த கட்டாய மதமாற்றத்திற்காக சூஃபி தர்காவிற்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த சிறுமி சிந்துவில் உள்ள ஜகோபாபாத்தைச் சேர்ந்த 45 வயதான முஸ்லிம் கடத்தல்காரனான வாசிர் ஹுசைனை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும் சமூக உடகங்களில் வெளியானது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டும் பாகிஸ்தான் காவல்துறை வழக்கம்போல மெத்தனமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மாதம் ஒரே நாளில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சிந்து மாகாணத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1,000 ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு, முஸ்லிம் மதத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டு, பாலியல் அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள உதவியற்ற ஹிந்து, கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான இந்த கொடூரமான இன அழிப்பு நடவடிக்கைகள், சர்வதேச அமைப்புகளால் குறிப்பாக மேற்கத்திய நாடுகளால் நடத்தப்படும் மனித உரிமைக் குழுக்கள் மற்றும் அரசுகளால் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தற்போது பக்ல்வேறு போலி தகவல்களை பரப்பி நமது பாரதத்தை உலக நாடுகளின் முன்னிலையில் அரக்கத்தனமாக காட்ட முனைப்புடன் செயல்படுகின்றன. ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் உண்மையான இனப்படுகொலைகள், கட்டாய மதமாற்றங்கள் குறித்து வாய் திறப்பதில்லை.