பாய்ந்தது உபா சட்டம்

திரிபுரா மாநிலத்தில் மசூதி எரிக்கப்பட்டதாக போலி செய்திகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு சமுக ஒற்றுமையை சீர்குலைக்கவும் வன்முறைகளை நிகழ்த்தவும் திட்டமிட்ட 102 சமூக ஊடகப் பயனாளர்கள் மீது அம்மாநில காவல்துறை உபா சட்டத்தின் கீழ், பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் கணக்குகளை முடக்கி, அந்த நபர்களின் அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு டுவிட்டர், முகநூல், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக, சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வகுப்புவாத நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சித்த நான்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது திரிபுரா காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.