நிதி ஆயோக் டெல்டா தரவரிசை

நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள டெல்டா தரவரிசை பட்டியலில், முதல் 10 இடங்களில் 7 இடங்களில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. ஒடிசாவின் கஜபதி மாவட்டம் முதலிடத்திலும், உ.பி.யின் பதேபூர் 2வது இடத்திலும், சித்தார்த்நகர் 3வது இடத்திலும் உள்ளன. டெல்டா தரவரிசை என்பது, பல்வேறு வளர்ச்சித் துறைகளில் ஒரு காலாண்டில் மாவட்டங்களில் நடைபெற்ற முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டது. 2018 முதல் நிதி ஆயோக் நாட்டின் 112 மாவட்டங்களுக்கு டெல்டா தரவரிசையை வழங்கி வருகிறது. இப்பட்டியலில் தமிழகத்தின் விருதுநகரும் ராமநாதபுரமும்கூட முதல் 20 இடங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், இப்பட்டியலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு 109வது இடத்தைப் பெற்று மிகவும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.