கோத்ரா வழக்குகள் முடித்து வைப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவர வழக்குகள் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “கோத்ரா கலவரத்தில் ஒரு வழக்கு தவிர, அனைத்து வழக்குகளிலும் விசாரணைகள் முடிவடைந்து மேல்முறையீடுகள் மட்டுமே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன” என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இதுகுறித்து கூறுகையில், “நரோடா காம் வழக்கில் ஒரே ஒரு வழக்கு விசாரணை மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி) கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், இந்த வழக்குகள் காலப்போக்கில் பயனற்றதா” மாறிவிட்டன” என கூறி. தற்போது வரை நிலுவையில் உள்ள கோத்ரா கலவரம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. மேலும், கோத்ரா கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக பொய் வழக்கு புனைந்த டீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை, உரிய வகையில் நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.