பாரதத்தின் 75 ஆண்டுகள் சுதந்திரத்தை கொண்டாடும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக நட்சத்திரப் பட்டாளம் நிறைந்த முதலாவது ஹிமாலய திரைப்பட விழாவை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் அமைந்திருக்கும் சிந்து சன்ஸ்கிருதி கேந்திராவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று தொடங்கி வைத்தார். இந்த ஐந்து நாள் திரைப்பட விழாவில் உள்ளூர் திரைப்பட இயக்குநர்களின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும். 12 ஹிமாலய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த திறமையாளர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும். பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தும் உணவு திருவிழா, கலாச்சார கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி ஆகியவையும் திரைப்பட விழாவின் போது நடைபெறுகின்றன.