மேட்டுப்பாளயத்தில் 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி அங்கு தொழிற்பேட்டை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு. அத்திக்கடவு அவினாசி திட்டம் வந்தால் அதன் மூலமாகப் பயன்பெறலாம், தங்கள் வாழ்வு வளப்படும் என்று நினைத்து சந்தோஷமாக இருந்த அப்பகுதி விவசாயிகள், இன்று தங்கள் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்துமோ என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த மாதம் இப்பகுதி விவசாய பெருமக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்த பிறகும் இந்த தொழிற்பேட்டை திட்டம் கைவிடப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ. ராசாவை விவசாயிக்கள் சந்தித்து மனு அளித்தபோது, ‘இன்னொரு முறை யோசித்து சொல்லுங்கள்’ என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதே தி.மு.க எதிர்கட்சியாக இருந்தபோது வேளாண் சட்டத்துக்கும், 8 வழி சாலைக்கும் எதிராகப் போராடியது என்பது குறிப்பிடத்தக்கது.