தவறான ஊடக அறிக்கை

கோவாக்சின் தடுப்பூசியின் உற்பத்தியாளரான பாரத் பயோடெக் நிறுவனம், அரசியல் காரணங்களால் “ஒரு சில நடைமுறைகளைத் தவிர்த்து”, “மருத்துவ சோதனையை விரைவுபடுத்தியதாக” ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தடுப்பூசிக்காக நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் மூன்று கட்டங்களில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அறிக்கைகள் முற்றிலும் முரணானது மற்றும் தவறானது. இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு நிபுணர் குழு தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையும் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மையையும் ஆய்வு செய்ததோடு, பொது மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ சோதனை முறையில் அவசர காலத்தில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்க பரிந்துரைத்தது. செய்தி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கோவாக்சினின் மருத்துவ பரிசோதனைகளில் கூறப்படும் ‘அறிவியல் சாராத மாற்றங்கள்’ மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, கட்டுப்பாட்டு நிறுவனத்தின் உரிய செயல்முறைக்கு இணங்கவும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதலுடனும் மேற்கொள்ளப்பட்டது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.