கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் என்ர பெயரில் முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்தியட வன்முறைகள் கலவரம் தொடர்பான வழக்கில், ஆசிப் என்பவரின் கடையை சுரேஷ் பதூரா என்பவர் சூறையாடியதாக காவல்துறைக்கு பொய்யாக ஒரு புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை சுரேஷ் பதூரா திட்டவட்டமாக மறுத்தார். இந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் ‘சுரேஷ் மீது சுமத்தப்பட்ட புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை, அது ஆசிப்பின் சொந்தக் கடை அல்ல, அது பகதூர்சிங் என்பவருக்கு சொந்தமானது. இது போன்ற ஆசிப்பின் பல பொய்யான வாக்குமூலங்கள், காவல்துறையின் அரைகுறை சாட்சிகள், சமர்ப்பிக்கப்பட்ட முன்னுக்குப்பின் முரணான ஆதாரங்கள் காரணமாக சுரேஷ் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என தீர்ப்பளித்தது.